கண் கேட்டபிறகு சூரிய நமஸ்காரம்
என் அன்பு
சொந்தபந்தங்கள் மற்றும் நண்பர்களுக்காக ஒரு செய்தி.
இன்று என் கணவரின் நினைவு நாள், இன்னைக்கு
என் மனசில் உள்ளதையும் நான் கத்துகிட்ட
சில விஷயங்களையும் உங்க கிட்ட பகிர்ந்துக்க விரும்பறேன். அதே நேரம் இது உங்களுக்கு
உபயோகமாவும் இருக்கும்னு எனக்கு தோணுச்சி.
18 வருஷம் நல்லபடியா குடும்பம்
நடத்தி கடைசி இரண்டு வருஷம் நிறைய கருத்துவேறுபாடு. அவர் கிட்ட நான் மன்னிப்பு
கேட்டுகிட்டே தான் இருக்கேன். ஆனா நாலு சுவத்துக்குள்ள அவருகிட்ட கண்ணீர் விட்டு
பேசறதால ஒரு பயனும் இல்லை எனவே உங்ககிட்ட நான் பகிர்ந்துகிறேன்.
கல்யாணமான ஆரம்பத்துல எனக்கு எந்த எதிர்பார்ப்பும்
இல்லாமல் தான் புகுந்த வீடு வந்தேன். அதனால எனக்கு ஏமாற்றம் எல்லாம் இல்லை கிடைச்ச
வாழ்க்கையை சந்தோஷமாகத்தான் வாழ்ந்தேன். அவரும் என்கிட்டே நார்மலா தான் இருந்தாரு. ரொம்ப அன்பு அப்டிலாம் சொல்ல
முடியாது. எனக்கு அது பெரிய விஷயமா தெரியல.
முதல் மகள் என் வயித்துல நின்னா, அதை பெரிசா கொண்டடுவங்கனு எதிர்பார்த்தேன்.
ஆனா அப்படிலாம் ஏதும் நடக்கல முதல் ஏமாற்றம். போக போக இப்படி லைப் அட்ஜஸ்ட் பண்ணி
வாழ கத்துகிட்டேன். என் எதிர்பார்ப்பு எதும்
நடக்காது ஆனால் ஒரு அதிசயம் அவர் மேல் எனக்கு அன்பு கூடியதே தவிர குறையவில்லை.
அவரும் அப்படித்தான் என்கிட்டயும் பசங்ககிட்டயும்
ரொம்ப அன்பா தான் இருப்பாரு. ஆனா எப்பவும் வெளிய காட்டிக்கமாட்டார்.
(வைரம் வெளியில் ஒளிவீசினால் தான் அதற்க்கு மதிப்பு மண்ணுக்குள்ள மறைச்சு
வெச்சா யாருக்குமே உபயோகபடாமல் மதிப்பில்லாமல் போய்டும் அப்டித்தான் எல்லோருடைய
அன்பும் வெளிபடுத்தினால் மட்டுமே அதற்க்கு மதிப்பு உண்டு மனசுல எனக்கு இருக்குனு
சும்மா சொல்றதால ஒரு பயனுமில்லை.) ஒருவேளை அவர் என்னிடம் தன்னோட அன்பை வெளிபடுத்தி
இருந்தால் நான்
எவ்வளவோ கஷ்டப்பட்டேன் அவருக்காக அதை
வார்த்தையில் சொல்லமுடியாது. ஆனால் வெளியில் இருந்து பார்பவர்களுக்கு தெரியாது.
என் அம்மாவீட்டுல இருக்கறவங்களுக்கு புரியும் என் நிலைமை. ஆனால் என் மாமியார்
வீட்டில் உள்ளவர்களுக்கு நான் எப்போதும் குறை மட்டுமே சொல்கிறேன் என்று
பேசுவார்கள். நான் ஆறுதலுக்காக மட்டுமே அவர்களிடம் என் மனகஷ்டத்தை சொல்லுவேன்.
ஒருகட்டத்தில் அதையும் நிறுத்திவிட்டேன். அவரிடம் நான் கேட்ட உறுதி மொழி இரண்டு
மட்டுமே ஒன்று குடிக்கவேண்டாம், இரண்டு அரசியல் வேண்டாம். ஆனால் அவரால் அதை
மட்டும் எனக்கு செய்து தரமுடியவில்லை. மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்த
பிரச்சினையும் இல்லை.
பல போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாக
பிள்ளைகளின் நலனுக்காக வீடு கட்டுவது என்று முடிவு எடுத்தோம். மயிலாப்பூர் சிறிய வீட்டை விற்று, மேலும் உறவினர்களிடமும் கடன்
வங்கி வீட்டை கட்டி முடித்தோம். ஆனால் ஒரு வருடம் கூட நாங்கள் சந்தோஷமாக
வாழவில்லை. கடன் கட்டவேண்டி முதல்முறையாக நான் வேலைக்கு போக முடிவு எடுத்தேன்.
அப்போதிலிருந்து ஆரம்பித்தது பிரச்சினை. கருத்துவேறுபாடு வர ஆரம்பித்தது. அவர்
அதிகமாக குடிக்க ஆரம்பித்தார். புதிய இடத்தில் அரசியலில் நுழைய நிறைய நண்பர்களை உருவாக்கி
அவர்களுக்கு நிறைய பணம் செலவு செய்ய ஆரம்பித்தார். அதனால் வீட்டில் நிறைய சண்டை உருவாச்சு.
நிம்மதி போச்சு, விவாகரத்துக்கும் விண்ணப்பிச்சிட்டேன். பசங்க வளர்ராங்க, மகள் கல்யாணம் பண்ணனும், வாங்கின கடன் அடைக்கணும் ஆனா
இப்படி பொறுப்பு இல்லாமல் இருக்காரேனு எனக்கு பிடிக்கலை இத்தனை வருஷம் அவர்கிட்ட
எவ்ளோ அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போனோம் ஆனாலும் இவருக்கு நம்மளோட அருமையும் தெரியல,
வீட்ல பொறுப்பு இல்லாம இருக்காருன்னு எனக்கும் பசங்களுக்கும் கோபம். அவர் அதிகமா
ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு உடம்பு கெட்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்த்தது அப்புறம் அவரோட
நுரையீரல் சிகரெட் பிடிச்சதால கெட்டுபோச்சு எனவே அது இதயத்துக்கு உதவி
பண்ணமுடியாது அவர் உயிர் பிழைக்கறது கஷ்டம்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க அப்டியே
அவரும் எங்களை எல்லாம் விட்டு கடவுள் கிட்ட போய் சேர்ந்துட்டார்.
இப்போ இவ்ளோ கதையும்
உங்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் என்ன தெரியுமா சொந்தங்களே, கண்கெட்ட பிறகு சூரிய
நமஸ்காரம் பண்றது இப்போ நான் தான். இவ்ளோநேரம் அவர்கிட்ட இருக்க கெட்ட (சில
விஷயங்களை நாகரிகம் கருதி சொல்லவில்லை) குணத்தை மட்டுமே சொல்லிட்டு இருந்தேன். ஆனா
அவர்கிட்ட எவ்ளோ நல்ல குணங்கள் இருந்தது தெரியுமா?
Ø குடும்பத்துமேல ரொம்ப
ரொம்ப அன்பா இருப்பார்
Ø நாங்க பசிக்குதுன்னு
இதுவரை சொன்னது இல்லை
Ø மத்தவங்களை
சாப்பிடவெச்சி ரசிப்பார்
Ø மத்தவங்களுக்கு என்ன
உதவி வேணாலும் செய்வார்
Ø சுத்தமாக இருக்க
விரும்புவார்.
Ø சொந்த பந்தங்களை
மதிப்பு கொடுத்து நடத்துவார் (ஆனா அவர புரிஞ்சிக்காம குறை சொல்லுவாங்க சிலர்)
Ø பணத்துக்கு
முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்
Ø அவர நம்பினவங்கள
கைவிடமாட்டார்
Ø சகோதரிகள், அம்மா
சகோதரியோட பசங்கனா உயிரையே விடுவார்.
Ø சிரிச்ச முகத்தோட
இருப்பார்
Ø என்னை ரொம்பவும்
நேசிச்சார்.
Ø எவ்ளோ பணம் கேட்டாலும்
இருந்தா டக்குனு எடுத்து கொடுப்பார்.
Ø கணக்கு கேட்க மாட்டார்.
Ø கடைசி வரை என்னை ரொம்ப
நம்பினார்.
Ø அம்மானா அவருக்கு ரொம்ப
பிடிக்கும்.
Ø அவரோட அம்மா கனவில்
புலம்பினால் கூட பதறியடித்து ஓடுவார்.
இன்னும் இதுபோல நிறைய
இருக்கு ஆனா இது எல்லாம் எனக்கு இப்போ தான் கண்ணுக்கு தெரியுது. இப்போ உன்ன
புரிஞ்சிகிட்டேன் வா பா னு கூப்டா வரமுடியாத இடத்துக்கு போய்ட்டாரு.
உங்களை எல்லாம் கையெடுத்து கும்பிட்டு
கேட்டுக்றேன் தயவு செய்து, உங்க வாழக்கை துணையை எந்த காரணத்துக்காகவும்
வெறுக்காதீங்க, அவங்க கிட்ட இருக்க நல்ல குணங்களை மட்டுமே பார்த்தீங்கனா குறைகள்
கண்ணுக்கு தெரியாது.
முதல்ல மனம் விட்டு பேசுங்க எல்லாம் சரியா
போய்டும். யார்கிட்டயும் எந்த சூழ்நிலையிலையும் அவங்கள விட்டு தராதீங்க. தப்பு
பண்ணிருந்த தனியா உக்கார்ந்து சொல்லி புரியவைங்க. (இதை நானும் அவரும் செய்யவில்லை)
அவங்க மட்டும் தான் உங்க உலகம், அவங்க இல்லனா எவ்ளோ சொந்த பந்தம் இருந்தாலும்,
தங்கத்தட்டில் சாப்பாட்டு ஊட்டினாலும் வாழ்க்கைத்துணைக்கு இணையா வாராது. இது
அட்வைஸ் இல்லை இன்று நான் படும் வேதனை. அதை நீங்களும் அனுபவிக்க கூடாதுன்னு தான்
சொல்றேன்.
வருடம் ஆக ஆக இன்னும் வேதனை அதிகமாகுமே தவிர
குறையாது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் உங்கள் துணையிடம் உங்களின் அன்பை
தெரிவியுங்கள், பரிசு பொருட்கள் கொடுக்கவேண்டும் என்று அவசியம் இல்லை, ஒரு
மென்மையான அணைப்பு அன்பை பலமடங்கு நிருபிக்கும்.
எல்லாரும் ஒரு நாள் கடவுள்கிட்ட போய் சேரத்தான் போறோம். ஆனால் கடைசி உயிர்விடும் வரை
கொடுக்கும் அன்பு விலைமதிப்பில்லாதது. அது போன உயிருக்கும் நிம்மதியை தரும்!
இருக்கும் உயிருக்கும் நிம்மதியை தரும்!
நன்றாக வாழ்பவர்களின்
அறிவுரையை விட வாழமுடியாமல் போனவர்களின் வார்த்தைகளில் ஆயிரம் மடங்கு உண்மையும்
வேதனையும் இருக்கும். எனவே எனது சொந்தபந்தங்கள் வாழ்க்கையை அன்புடன் கொண்டு
செல்லுங்கள். அன்பு மட்டுமே நிரந்தரம்.
கருத்துகள்
கருத்துரையிடுக