கண் கேட்டபிறகு சூரிய நமஸ்காரம்
என் அன்பு சொந்தபந்தங்கள் மற்றும் நண்பர்களுக்காக ஒரு செய்தி. இன்று என் கணவரின் நினைவு நாள், இன்னைக்கு என் மனசில் உள்ளதையும் நான் கத்துகிட்ட சில விஷயங்களையும் உங்க கிட்ட பகிர்ந்துக்க விரும்பறேன். அதே நேரம் இது உங்களுக்கு உபயோகமாவும் இருக்கும்னு எனக்கு தோணுச்சி. 18 வருஷம் நல்லபடியா குடும்பம் நடத்தி கடைசி இரண்டு வருஷம் நிறைய கருத்துவேறுபாடு. அவர் கிட்ட நான் மன்னிப்பு கேட்டுகிட்டே தான் இருக்கேன். ஆனா நாலு சுவத்துக்குள்ள அவருகிட்ட கண்ணீர் விட்டு பேசறதால ஒரு பயனும் இல்லை எனவே உங்ககிட்ட நான் பகிர்ந்துகிறேன். கல்யாணமான ஆரம்பத்துல எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் புகுந்த வீடு வந்தேன். அதனால எனக்கு ஏமாற்றம் எல்லாம் இல்லை கிடைச்ச வாழ்க்கையை சந்தோஷமாகத்தான் வாழ்ந்தேன். அவரும் என்கிட்டே நார்மலா தான் இருந்தாரு. ரொம்ப அன்பு அப்டிலாம் சொல்ல முடியாது. எனக்கு அது பெரிய விஷயமா தெரியல. முதல் மகள் என் வயித்துல நின்னா, அத...